303. பாப்பாப்பட்டி விவகாரம்
தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நட்டார்மங்கலம் தொகுதிகளில், பஞ்சாயத்து தேர்தல் நல்லபடியாக நடைபெற்று, அங்கு தலித்துகள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக, திமுக அரசு, விழாவெல்லாம் எடுத்து அமர்க்களப்படுத்தியது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று எண்ணுகிறேன். தலித்துகளை தைரியமாக போட்டியிட முன்வர வைத்ததிலும், அத்தொகுதிகளில் உள்ள கள்ளர் இன மக்களிடம் பேசி ஒரு சுமுகமான சூழல் உண்டாக்கியதிலும், பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தத் தொடங்கியதிலும், மதுரை கலெக்டர் உதயசந்திரன் அவர்களுக்கு பெரும்பங்குண்டு என்பதை அனைவரும் அறிவர். இரு சமூகத்தினரிடம் நல்ல உறவு வைத்துள்ளவரும் கூட.
திடீரென்று அவருக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், மு.க.அழகிரியுடன் கலெக்டர் இணக்கமாக இருந்து செயல்பட மறுத்தது தான் என்று செய்தி !!! இதைத் தொடர்ந்து, அவர் விடுப்பில் சென்று விட்டார். பாப்பாப்பட்டியின் பிரெசிடெண்ட் பெரியகருப்பன், கலெக்டரின் மாற்றலை எதிர்த்து தான் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தார். கலெக்டரை மாற்றுவதால், வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும், சாதிப் பிரச்சினை மீண்டும் தீவிரமாகி தாங்கள் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என்றும், மூன்று தலித் பஞ்சாயத்துத் தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
லோக்கல் திமுக தலைவர்கள், தலித் பஞ்சாயத்துத் தலைவர்களின் கையை முறுக்கி, அவர்களை புது கலெக்டரை சந்திக்க வைத்து, 'பிரச்சினை ஒன்றுமில்லை' என்று அறிவிக்கவும் செய்து விட்டனர். அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும், இந்த தொகுதிகளில் சாதிப்பூசல் கனன்று கொண்டு தான் உள்ளது என்பது தான் உண்மை. இத்தொகுதிகளில், இரட்டை டம்ளர் முறை இன்னும் நடைமுறையில் தான் உள்ளது. கடைகளில், தலித்துகள் சரிசமமாக அமர்ந்து தேநீரோ, உணவோ சாப்பிட முடியாத நிலை நிலவுகிறது. தலித் ஒருவரை பஞ்சாயத்துத் தலைவராக ஆக்கி விட்டால் மட்டும் போதுமா ???
அரசு இயந்திரத்தால் / சட்டத்தால் மட்டும், தலித்துக்களுக்கு எதிரான இந்த மனப்போக்கை மாற்ற முடியாது என்பது தெளிவு ! 'இரண்டாயிரம் வருடங்களாக' என்று அரைத்த மாவையே அரைக்காமல், ஒரு சமுதாயமாக / சமுதாயத்தில் ஒரு அங்கத்தினராக / ஒரு குடிமகனாக / ஒரு மனிதனாக, ஆக்கபூர்வமாக நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பது, செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்று என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் !
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 303 ***
6 மறுமொழிகள்:
As usual, my comment will be the first comment !
Test :)
பார்க்க:
http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
http://dondu.blogspot.com/2006/03/blog-post_26.html
தலித்துகளாகப் பார்த்து ஏதாவது தங்களுக்காக செய்து கொண்டால்தான் உண்டு. இவர்களுக்கு முன்னால் நாடார்கள் தங்களைத் தாங்களே முன்னேற்றிக் கொண்டுள்ளதை இவர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சமுதாயத்தில் ஒரு அங்கத்தினராக / ஒரு குடிமகனாக / ஒரு மனிதனாக, ஆக்கபூர்வமாக செய்ய முடிவது எல்லாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் நல்ல கருத்துக்களையும்,நல்ல சிந்தனைகளையும்
பரப்ப முடியும் என்பது மட்டும் தான்.
கள்ளர்கள் தலித்துகளை வாடா, போடா என்று ஏக வசனத்தில் பேசுவதைப் போல் தான் பிராமணர்களும் கள்ளர்களை பேசினார்கள் முப்பது , நாற்பது வருடங்களுக்கு முன்பு.
ஆனால் இன்று ஒரு பிராமணர் , கள்ளரை வாடா,போடா என்று அழைத்து விட முடியாது.
கள்ளர்கள் இன்று குறிப்பிடத்தக்க அளவிற்கு பொருளாதார வளர்ச்சியையும் , அரசியல் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
இதை அடைய நாற்பது வருடங்கள் ஆகியுள்ளது.இந்த வளர்ச்சியை இன்னும் பத்து, பதினைந்து வருடங்களில் தலித் மக்கள் அடைந்துவிடுவார்கள்.
அப்போது கள்ளர் மற்றும் இடைநிலை சாதியினர் பிராமணர்களின் இடத்தை அடைவார்கள்.
பிராமணர்கள் எந்த இடத்தை அடைவார்களோ யார் கண்டது?
டோ ண்டு, ஜாலி ஜம்பர்,
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
எ.அ.பாலா
>>பிராமணர்கள் எந்த இடத்தை அடைவார்களோ யார் கண்டது?<<
Good question! The Brahmins in the old days were like the Jews in the last 50 years or so. They were opportunists. The brahmins were highly educated and got positions in the British administration. While some misused their status (mostly out of ignorance and some out of some arrogance) the vast majority of them minded their own business. Now the entire community is being punished for real and imaginary "sins" of the brahmins of yore. Pathetic. The problem is a large segment of the brahmin population of today is being punished unnecessarily although they have not participated in any "sins" of the past. Very few (educated brahmins) will escape the clutch by going away from ThamizhnADu to other parts of India and to foreign lands.
Post a Comment